இந்தியா

காணாமல் போன 5 வயது சிறுவனின் உடல் பக்கத்து வீட்டில் மீட்பு: வெடித்தது வன்முறை

21st Sep 2022 11:59 AM

ADVERTISEMENT


போல்பூர்: மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் மூன்று நாள்களுக்கு முன்பு காணாமல் போன 5 வயது சிறுவனின் உடல், பக்கத்து வீட்டிலிருந்து மீட்கப்பட்ட நிலையில் அங்கு வன்முறை வெடித்துள்ளது.

மோல்டங்கா கிராமத்தில், 5 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனான். அவனை குடும்பத்தினர் தேடி வந்தனர். சிறுவன் காணாமல் போனதிலிருந்தே அந்த கிராமத்தில் பதற்றம் நிலவி வந்தது.

இந்த நிலையில், சிறுவனின் பக்கத்து வீட்டிலிருந்து திங்கள்கிழமை இரவு முதல் துர்நாற்றம் வீசியது குறித்து கிராம மக்கள் காவல்நிலையத்துக்குப் புகார் அளித்தனர்.

இதையும் படிக்க.. 'பே சிஎம்' போஸ்டர்கள்: கர்நாடக முதல்வருக்கு எதிராக இப்படி ஒரு போராட்டம்

ADVERTISEMENT

செவ்வாயன்று அந்த வீட்டுக்கு வந்த காவல்துறையினர், வீட்டின் பரண் மேல், பாலிதீன் பை சுற்றிய நிலையில், சிறுவனின் உடலை கண்டெடுத்தனர். உடனடியாக சிறுவனின் உடல் கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அந்த வீட்டில் வசித்து வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனின் உறவினர்கள் உள்பட கிராமத்தினர், அப்பெண்ணின் வீட்டை சூறையாடியதால், அப்பகுதியில் வன்முறை வெடித்தது.

இதையும் படிக்க | ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் கவனிக்க..

ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சிறுவனின் மரணத்துக்குக் காரணம் என்ன, இந்த கொலையின் பின்னணியில் இருக்கும் பகை என்ன என்பது குறித்தும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT