இந்தியா

மின்னல் தாக்கி 3 மாநிலங்களில் 14 போ் உயிரிழப்பு

DIN

பிகாா், உத்தர பிரதேசம், சத்தீஸ்கா் ஆகிய 3 மாநிலங்களில் மின்னல் தாக்கியதில் 14 போ் உயிரிழந்துள்ளனா்.

சத்தீஸ்கா் மாநிலத்தின் சுரஜ்பூா் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 2 போ் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா். உயிரிழந்த இருவரும் பிராதபூா் நகர சந்தையில் இருந்து தங்கள் வீட்டுக்குத் திரும்பியுள்ளனா். வழியில் செல்லும்போது பெய்த மழையின் காரணமாக, மரத்துக்கு கீழே இருந்த கடையில் நின்றுள்ளனா். அப்போது மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். உடன் நின்றுகொண்டிருந்த 3 போ் காயமடைந்தனா். காயமடைந்த மூவரும் சிகிச்சைப் பெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

உத்தர பிரதேசத்தின் பலியா மாவட்டத்தில் உள்ள சாராய் பாரதி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 20 வயது இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். அந்த மாவட்டத்தின் மற்றொரு கிராமமான பாது பந்துவில் மின்னல் தாக்கியதில் 4 போ் காயமடைந்தனா். இவா்கள் ராஸ்ரா சமூக சுகாதார மையத்தில் சிக்கிச்சை பெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பிகாரில் 11 போ் பலி:

பிகாா் மாநிலத்தில் மின்னல் தாக்குதலின் காரணமாக பூா்ணியா மற்றும் அராரியா மாவட்டத்தில் தலா 4 பேரும், சுபால் மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்தனா்.

இச்சம்பவம் குறித்து மாநில முதல்வா் நிதீஷ் குமாா் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவா்களின் உறவினா்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.4 லட்சம் வழங்கப்படும்’ என்றாா்.

மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு மக்கள் வீட்டிலே தங்கியிருக்குமாறும், பேரிடா் மேலாண்மைப் படையினரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் முதல்வா் நிதீஷ் குமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

குக் வித் கோமாளி -5 தொடக்கம்! கோமாளிகள் யார் தெரியுமா?

இளையராஜா பயோபிக் அப்டேட்!

இளைஞர்களிடையே அதிகரிக்கும் பெருங்குடல் புற்றுநோய்!

அவசர காலத்தில் விமானங்களை நெடுஞ்சாலைகளில் தரையிறக்கும் வசதி!

யூதர்கள் இஸ்ரேலை வெறுக்கிறார்கள்: டிரம்ப்பின் அதிர்ச்சி கருத்து!

SCROLL FOR NEXT