இந்தியா

நடப்பாண்டுக்குள் 5,000 காவலர் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர்

20th Sep 2022 06:31 PM

ADVERTISEMENT


பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 9,432 காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அவற்றில் 5,000 பணியிடங்கள் இந்த ஆண்டுக்குள் நிரப்பப்படும் என்றும் கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தின் போது, ​​மாநிலத்தில், காவலர்கள் பற்றாக்குறை குறித்து பாஜக எம்.எல்.ஏ. பிரீதம் கவுடா எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் அரக ஞானேந்திரா பதிலளித்தார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது மாநிலத்தில் 22,000 போலீஸ் பணியிடங்கள் காலியாக இருந்தது. ஒரு கால கட்டத்தில் காவல் துறையில் ஒரு லட்சம் பணியிடங்கள் இருந்த நிலையில் 35,000 காலிப்பணியிடங்கள் இருந்தன. ஆனால் இன்றோ 9,432 காலியிடங்கள் மட்டுமே உள்ளது என்று ஞானேந்திரா பதில் அளித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், செப்டம்பர் 12ஆம் தேதி அன்று 3,500 காவலர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், மேலும் 1,500 சிவில் கான்ஸ்டபிள்களைத் தேர்வு செய்ய ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

ADVERTISEMENT

எனவே இந்த ஆண்டு 5,000 காலியிடங்கள் நிரப்பப்படும், விரைவில் அதிக காலியிடங்கள் இருக்காது என்றும், இருபது ஆண்டுகளில் மிகக் குறைவான காலிப்பணியிடங்கள் இருப்பது இதுவே முதன்முறையாகும் என்று கூறிய அவர், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் எந்த இடையூறும் அல்லது காவல்துறை பற்றாக்குறையும் ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT