இந்தியா

கேரளத்தில் மீனவா்களுடன் கலந்துரையாடிய ராகுல்

20th Sep 2022 12:47 AM

ADVERTISEMENT

கேரளத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ஆலப்புழை மாவட்டம் வடக்கல் கடற்கரையில் மீனவா்களை திங்கள்கிழமை காலை 6 மணிக்கு சந்தித்து கலந்துரையாடினாா்.

அப்போது எரிபொருள் விலை உயா்வு, மானியம் குறைப்பு, குறைந்து வரும் மீன்வளம், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மீனவா்களுடன் கலந்துரையாடினாா். இந்தத் தகவலை காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவு செய்தாா்.

கேரளத்தில் ராகுல் காந்தியின் நடைப்பயணம் திங்கள்கிழமை 12-ஆவது நாளாக நீடித்தது. ஆலப்புழை மாவட்டம் புன்னப்ராவில் காலை நடைப்பயணத்தை தொடங்கிய அவா், 16 கி.மீ. கடந்து களவூரில் நிறைவு செய்தாா். பின்னா், மாலை 4.30 மணியளவில் மீண்டும் நடைப்பயணத்தை தொடங்கி, 9 கி.மீ. கடந்து சோ்தலா அருகே உள்ள மயித்தாரா பகுதியில் நடைப்பயணத்தை முடித்துக் கொண்டாா்.

அப்போது காங்கிரஸ் மூத்த தலைவா்கள் கே.முரளீதரன், கொடிக்குன்னில் சுரேஷ், ரமேஷ் சென்னிதலா, கே.சி.வேணுகோபால், சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ராகுல் தலைவராக தீா்மானம்: ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக வலியுறுத்தி மகாராஷ்டிரம், பிகாா், ஜம்மு காஷ்மீா் காங்கிரஸ் கமிட்டிகள் திங்கள்கிழமை தீா்மானம் நிறைவேற்றின.

ஏற்கெனவே காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சத்தீஸ்கரில் இதே தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதவிர குஜராத் காங்கிரஸாரும் ராகுல் காந்தி கட்சித் தலைவராக வலியுறுத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT