இந்தியா

நமது வரலாற்றை புரிந்து கொள்ள ஹிந்தி கற்க வேண்டும்: அமித் ஷா

14th Sep 2022 01:26 PM

ADVERTISEMENT

நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள தேசிய மொழியான ஹிந்தியை கற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், சூரத்தில் நடைபெற்ற அகில இந்திய அதிகாரப்பூர்வ மொழி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் அமித் ஷா பேசியதாவது:

“உள்ளூர் மொழிகளும், ஹிந்தி மொழியும் நமது கலாச்சாரத்தின் உயிரோட்டம். நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அதிகாரப்பூர்வ மொழியான ஹிந்தியை கற்க வேண்டும். இவற்றை புரிந்துகொள்ள உள்ளூர் மொழியை வலுப்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

ஹிந்தி மொழியும், உள்ளூர் மொழிகளும் இணைந்து ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட மொழிகளின் தாழ்வு மனப்பான்மையை வேரோடு பிடுங்கி எறியும் நேரம் வந்துவிட்டது.

இதையும் படிக்க | ரூ.12 லட்சம் மின் கட்டணமா..? காவலாளிக்கு அதிர்ச்சி அளித்த மின் வாரியம்!

தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நுணுக்கமாக ஆராய வேண்டும். தொடக்கக் கல்வி மற்றும் உயர் கல்விக்கு உள்ளூர் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சித் துறையிலும் உள்ளூர் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.” என்று பேசினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT