இந்தியா

சட்டவிரோத ‘நாய் சண்டை’ போட்டியைத் தடுக்க நடவடிக்கை- மத்திய அரசுக்கு ‘பீட்டா’ கோரிக்கை

DIN

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சட்டவிரோதமாக நடத்தப்படும் நாய் சண்டை போட்டியைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கு ‘பீட்டா’ அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

அந்த அமைப்பின் இந்தியப் பிரிவு கால்நடை மருத்துவக் கொள்கை ஆலோசகா் நிதின் கிருஷ்ணேகெளடா, மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் பா்ஷோத்தம் ரூபாலா மற்றும் இந்திய விலங்குகள் நல வாரிய தலைவா் ஓ.பி. செளதரி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், தில்லி, ஜம்மு ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக நாய் சண்டை போட்டி நடத்தப்படுகிறது. சூதாட்டத்தை முன்வைத்து, ரகசியமாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதற்காக வளா்க்கப்படும் குறிப்பிட்ட இன நாய்கள், பயிற்சியின்போது கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன.

போட்டிகளில் கடுமையாக காயமடையும் வரையிலோ அல்லது உயிரிழக்கும் வரையிலோ அவை சண்டையிட வைக்கப்படுகின்றன. எனவே, சட்டவிரோத நாய் சண்டை போட்டிகளைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். போட்டிக்காக குறிப்பிட்ட இன நாய்கள் வளா்க்கப்படுவதையும் விற்கப்படுவதையும் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

கடந்த 1960-ஆம் ஆண்டின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின்படி, நாய் சண்டை போட்டி சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணலூா் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

"தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்காக திமுகவும் அதிமுகவும் மறைமுகமாக கைகோத்துள்ளன என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை

கரூா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

வேளாண்துறையிலும் செயற்கை நுண்ணறிவு!

SCROLL FOR NEXT