இந்தியா

வாட்ஸ்ஆப்பே வேண்டாம்: நிரந்தரமாக டெலீட் செய்யும் வழிமுறை இதோ

14th Sep 2022 05:13 PM

ADVERTISEMENT

 


இந்த செய்தியை நீங்கள் வாட்ஸ்-ஆப் வாயிலாகக் கூட படித்துக் கொண்டிருக்கலாம். வாய்ப்பிருக்கிறது. ஆனால், வாட்ஸ்-ஆப்பே வேண்டாம்.. போரடித்து விட்டது. அதனை டெலீட் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

அதென்ன பெரிய விஷயம், செல்லிடப்பேசியிலிருந்து வாட்ஸ்-ஆப் செயலியை டெலீட் செய்துவிட்டால் போதும் என்று நினைக்க வேண்டாம்.  அவ்வாறு செய்தால் மட்டும் போதாது, உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கையே நீங்கள் நீக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் எண்ணில் வாட்ஸ்ஆப் இல்லை என்று மற்றவர்களுக்குக் காண்பிக்கும்.

இதையும் படிக்க..இரட்டை வானவில்.. இப்போது சூரிய ஒளிக்கதிர்: பிரிட்டன் மக்கள் நெகிழ்ச்சி

ADVERTISEMENT

ஒருவரோடு அல்லது குழுவோடு பேச, உரையாட, தகவல்களை அனுப்ப என பல்வேறு வகையிலும் உதவியாக இருக்கும் வாட்ஸ்-ஆப் கணக்கை டெலீட் செய்வதற்கு முன்பு, ஒரு சில விஷயங்களை கருத்தில் கொள்ளுங்கள்.

வாட்ஸ் ஆப் குழுக்களிலிருந்து வெளியேறுங்கள்.
நீங்கள் நிர்வகிக்கும் வாட்ஸ்-ஆப் குழுக்களை டெலீட் செய்யுங்கள்.
உங்கள் கூகுள் டிரைவ் பேக்கப் தகவல்களை டெலீட் செய்யவும்.

இதையும் படிக்க | பார்வையை இழக்கப்போகும் பிள்ளைகள்: புரட்சிகரமாக யோசித்த பெற்றோர்! பாராட்டுகள்

பிறகு, வாட்ஸ் ஆப் செயலிக்குச் சென்று அதில் செட்டிங் என்பதை தேர்வு செய்து, அதில் அக்கவுண்ட் என்பதை கிளிக் செய்யவும். அக்கவுண்ட் என்பதில் இருக்கும் டெலீட் மை அக்கவுண்ட் என்பதை தொட்டதும், ஒரு முழு பட்டியல் வெளியாகி, இறுதியில் சிவப்பு நிறத்தில் டெலீட் மை அக்கவுண்ட் என்ற வாய்ப்பை தொட்டதும், உங்கள் செல்லிடப்பேசி எண்ணை உள்ளிட்டு டெலீட் செய்யலாம்.

சில நேரங்களில் உங்கள் வாட்ஸ்-ஆப் கணக்கை வேறு எண்ணுக்கும் மாற்றிக் கொள்ளலாம். அதற்கான வாய்ப்பும் அங்கே இருக்கிறது.

 

Tags : whatsapp
ADVERTISEMENT
ADVERTISEMENT