இந்தியா

பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் சந்திப்பு

14th Sep 2022 07:09 PM

ADVERTISEMENT

 

இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் கேத்ரின் கொலோன்னா பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். 

பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் கேத்ரின் கொலோன்னா மூன்று நாள்கள் அரசு முறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார். இன்று தில்லி வந்த அவர், முக்கியத் தலைவர்களை சந்தித்த பிறகு நாளை மகாராஷ்டிரததிற்கு செல்லவுள்ளார். அங்கு தொழில் துறையினரை சந்திக்கவுள்ளார். 

படிக்க அக்னிபத் திட்டத்துக்கு ஆம் ஆத்மி முழு ஒத்துழைப்பு வழங்கும்: கேஜரிவால்

ADVERTISEMENT

முன்னதாக தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை கேத்ரின் கொலோன்னா நேரில் சந்தித்துப் பேசினார். அதில் இந்தோ- பசுபிக் முத்தரப்பு வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர். 

அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரான் தெரிவித்ததாக நட்பு ரீதியான வாழ்த்தை பிரதமரிடம் குறிப்பிட்டார். பின்னர் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்த சிந்தனையுள்ள கருத்துக்கள், பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.  

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT