இந்தியா

ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு

14th Sep 2022 03:20 PM

ADVERTISEMENT

 

மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளார்.

பிரிட்டனின் இரண்டாம் அரசியான எலிசபெத் கடந்த 9 ஆம் தேதி உடல் நலக்குறைவால் மறைந்தார். அதனைத் தொடர்ந்து அவருடைய உடல் ஸ்காட்லாந்தின் பால்மரால் அரண்மனையில் இருந்து லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு  அஞ்சலிக்காகக் கொண்டுவரப்பட்டது.

அங்கு லண்டனில் பிரிட்டன் நாடாளுமன்றம் அடங்கிய வெஸ்ட்மின்ஸ்டா் வளாகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக 4 நாள்கள் அரசியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: எலிசபெத் ராணியை வரவேற்ற கூத்தாநல்லூர் அப்துல் அஜீஸ்!

மேலும், அரசியின் இறுதிச் சடங்கு வருகிற செப். 19 நடைபெறுவதால் அதில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் லண்டன் செல்ல உள்ளனர்.

இந்நிலையில், இந்தியா சார்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

செப்.17 முதல் 3 நாள் பயணமாக லண்டன் செல்லும் திரௌபதி முர்மு 19 ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிச் சடங்கில் பங்கேற்று அஞ்சலியை பதிவு செய்வார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT