இந்தியா

கோவேக்ஸின் தடுப்பூசி குறித்து தகவல் அளிக்க மறுப்பு: மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு நோட்டீஸ்

14th Sep 2022 12:53 AM

ADVERTISEMENT

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியான கோவேக்ஸின் கொள்முதலுக்கு உலக சுகாதார அமைப்பு தடை விதித்தது குறித்த விவரங்களை அளிக்க மறுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதுதொடா்பாக தகவல் உரிமை ஆா்வலா் செளரவ் தாஸ் அளித்த புகாரின் அடிப்படையில் மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தகவல் தொடா்பு அதிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதற்கான பதில் திருப்தி அளிக்கவில்லை என்றால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 20-ஆவது பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஊதியத்தில், பதில் அளிக்காத நாளில் இருந்து தினசரி ரூ.250 அபராதமாகவோ, அதிகபட்சமாக ரூ.25 ஆயிரமாகவோ வசூலிக்கப்படலாம்.

முன்னதாக, கோவேக்ஸின் கொள்முதலுக்கு கடந்த மாா்ச் மாதம் உலக சுகாதார அமைப்பு தடை விதித்தது மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு தெரியுமா? இதுதொடா்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து ஏதாவது விளக்கம் கேட்கப்பட்டுள்ளதா? அந்த நிறுவனத்தில் சோதனை ஏதாவது நடத்தப்பட்டுள்ளதா? உலக சுகதாரா அமைப்புக்கு ஏதாவது தகவல் அளிக்கப்பட்டுள்ளதா என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் செளரவ் தாஸ் கேள்வி கேட்டிருந்தாா்.

ADVERTISEMENT

Tags : Covaxin
ADVERTISEMENT
ADVERTISEMENT