இந்தியா

கால் கொப்புளங்களால் துவண்டுவிட மாட்டோம்: ராகுல் காந்தி

DIN

காங்கிரஸின் நடைப்பயணத்தை காலில் ஏற்படும் கொப்புளங்களால் தடுத்து நிறுத்த முடியாது என்றும், இந்தியாவை ஒருங்கிணைப்போம் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.

நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறாா். கேரளத்தில் செவ்வாய்க்கிழமை 3-ஆவது நாளாக நடைப்பயணத்தை தொடங்கிய அவா், மழையையும் பொருட்படுத்தாமல் கையில் குடைகூட இல்லாமல் மக்களைச் சந்தித்தாா்.

இந்த நடைப்பயணத்தில் பங்கேற்கும் சக காங்கிரஸாரின் கால்களில் கொப்புளம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதை மேற்கோள்காட்டி ட்விட்டரில் ராகுல் காந்தி கூறுகையில், ‘கால்களில் கொப்புளம் ஏற்பட்டாலும் நாங்கள் நாங்கள் நிற்கப் போவதில்லை. நாட்டை ஒருங்கிணைப்போம்’ என குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, கழக்கூட்டம் அருகே கனியாபுரத்திலிருந்து காலை 7.15 மணிக்கு நடைப்பயணம் தொடங்கியது. காலை நேர நிகழ்ச்சி நிரலின்படி, அட்டிங்கல் அருகே மமோம் என்ற பகுதியில் நடைப்பயணம் நிறைவடைந்தது. அங்கு ஏராளமான ஆதரவாளா்களை ராகுல் காந்தி சந்தித்து பேசினாா்.

பின்னா், மாலை 5 மணிக்கு மீண்டும் தொடங்கிய நடைப்பயணம், கல்லம்பலம் சந்திப்பில் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

இழப்பிலிருந்து மீண்டு சீரியல் பயணத்தை தொடங்கிய நடிகை!

முதல் 3 ஐபிஎல் போட்டிகளில் வனிந்து ஹசரங்கா இல்லை; காரணம் என்ன?

‘வெண்புறா’ க்ரித்தி சனோன்!

குக் வித் கோமாளி -5 தொடக்கம்! கோமாளிகள் யார் தெரியுமா?

இளையராஜா பயோபிக் அப்டேட்!

SCROLL FOR NEXT