இந்தியா

நடைப்பயணத்தின் 8-வது நாளில் ராகுல் காந்தி!

14th Sep 2022 08:03 AM

ADVERTISEMENT


பாரத் ஜோடோ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் 8வது நாளை, கேரள மாநிலம் நவைக்குளத்திலிருந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று காலை தொடங்கினார்.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா். தமிழகத்தில் நிறைவடைந்த நடைப்பயணம், தற்போது கேரளத்தில் நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க | கால் கொப்புளங்களால் துவண்டுவிட மாட்டோம்: ராகுல் காந்தி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் நவைக்குளம் சந்திப்பிலிருந்து புதன்கிழமை காலை ராகுல் காந்தி நடைப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். இந்த நடைப்பயணம் 11 மணியளவில் சாத்தனூர் பகுதியில் நிறுத்தப்பட்டு, ஓய்வுக்குப் பிறகு மாலை 4.30 மணிக்கு மீண்டும் சாத்தனூரிலிருந்து தொடங்கி இரவு 7.30 மணியளவில் பள்ளிமுக்கு என்ற பகுதியில் இன்றைய பயணத்தை நிறுத்துகின்றனர்.

மொத்தம் 150 நாள்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,600 கி.மீ. நடைப்பயணம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT