இந்தியா

நீலம்பூரில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து: 60 பேர் காயம்

10th Sep 2022 11:19 AM

ADVERTISEMENT

 

கோழிக்கோடு:  நீலம்பூரில் இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்டதில் 60 பேர் காயமடைந்தனர். 

இதுகுறித்து  நிலம்பூர் போலீசார் தெரிவித்ததாவது: 

நீலம்பூர் அருகே தானா என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 60 பேர் காயமடைந்தனர். 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மீதமுள்ள 6 பேர் மஞ்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 53 பேர் நீலம்பூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | அரிசி உற்பத்தி 60-70 லட்சம் டன் சரிய வாய்ப்பு: மத்திய உணவுத் துறை

இந்த விபத்தில் இரு பேருந்துகளின் முன்பகுதியும் சேதமடைந்தன. இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பேருந்துகள் உரிய நேரத்தில் செல்ல முடியாததால், ஓட்டுநர்கள் அதிவேகமாக பேருந்தை ஓட்டிச் செல்வதால் விபத்து ஏற்பட்டதாக பயணி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், தனியார் பேருந்துகள் பாதுகாப்புக் காரணமின்றி அதிவேகமாகச் செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்படும் பேருந்துகள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT