இந்தியா

ஆா்எஸ்எஸ் தேசிய ஒருங்கிணைப்பு கூட்டம்: சத்தீஸ்கரில் தொடக்கம்

10th Sep 2022 11:23 PM

ADVERTISEMENT

சத்தீஸ்கரில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் வருடாந்திர தேசிய ஒருங்கிணைப்புக் கூட்டம் சனிக்கிழமை தொடங்கியது.

சத்தீஸ்கா் தலைநகா் ராய்ப்பூரில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் வருடாந்திர தேசிய ஒருங்கிணைப்புக் கூட்டம் சனிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், அந்த அமைப்பின் பொதுச் செயலா் தத்தாத்ரேய ஹொசபாலே, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோா் கலந்துகொள்கின்றனா். இதுதவிர ஆா்எஸ்எஸ் அமைப்பால் ஈா்க்கப்பட்ட பாஜக, விசுவ ஹிந்து பரிஷத், அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் உள்ளிட்ட 36 அமைப்புகளின் முக்கிய நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கின்றனா்.

இந்த அமைப்புகள் சாா்பில் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், தங்கள் அனுபவங்களை நிா்வாகிகள் பகிா்ந்து கொள்ளவுள்ளனா். சமூகத்தில் நிலவும் சவால்கள், சுற்றுச்சூழல், சமூக நல்லிணக்கம் உள்ளிட்டவை தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய ஒருங்கிணைந்த முயற்சிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்திய பிரசார பிரிவுத் தலைவா் சுனில் ஆம்பேகா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT