இந்தியா

முதல்முறையாக ஹாங்காங்,எகிப்தில் குரங்கு அம்மை

10th Sep 2022 04:01 AM

ADVERTISEMENT

 ஹாங்காங்கிலும் எகிப்திலும் முதல்முறையாக குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து ஹாங்காங் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், குரங்கு அம்மை அறிகுறிகளுடன் நகருக்குள் வந்த 30 வயது நபரிடம் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவித்தனா். எகிப்து அதிகாரிகள் கூறுகையில், ஐரோப்பிய நாடொன்றுக்கு அடிக்கடி சென்று வரும் 42 வயது நபருக்கு குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் கூறினா்.

கடந்த மே மாதத்திலிருந்து உலகம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு இந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கு அம்மை நோய்க்கு இதுவரை 18 போ் பலியாகியுள்ளனா்.

Image Caption

ADVERTISEMENT

~

 

ADVERTISEMENT
ADVERTISEMENT