இந்தியா

குஜராத் மாற்றத்தை விரும்புகிறது: அரவிந்த் கேஜரிவால்

10th Sep 2022 06:56 PM

ADVERTISEMENT

குஜராத் மாற்றத்தை விரும்புவதாகவும், விரைவில்  தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குஜராத்திற்கு பயணம் மேற்கொள்வார் எனவும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லி துணை முதல்வர் குஜராத்திற்கு பயணம் மேற்கொள்வார் என அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ள போதிலும் அவர் எப்போது தனது குஜராத் பயணத்தைத் தொடங்குவார் என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

இது குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “ குஜராத் மாற்றத்தினை விரும்புகிறது. விரைவில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குஜராத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ஸ்மித், வார்னர் கேப்டன் ஆவதில் எந்தத் தடையும் இல்லை: ஆரோன் ஃபிஞ்ச்

ADVERTISEMENT

அரவிந்த் கேஜரிவாலின் இந்த ட்விட்டர் பதிவுக்கு குஜராத் மாநில ஆம் ஆத்மி தலைவர் கோபால் இடாலியா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மணீஷ் சிசோடியா வருகை குறித்து குஜராத் மாநில ஆம் ஆத்மி தலைவர் கூறியதாவது: “ தில்லி துணை முதல்வரின் வருகை குறித்த அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. மக்கள் வருகிற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கேஜரிவாலின் தலைமையிலான ஆம் ஆத்மிக்கு வாக்களித்து மாநிலத்தில் கல்வி,மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். தில்லியின் கல்வி புரட்சியின் நாயகன் மணீஷ் சிசோடியாவை குஜராத்திற்கு வரவேற்கிறோம். குஜராத் மாற்றத்தை விரும்புகிறது. நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மாற்றத்தைக் கொண்டு வரலாம்.” என்றார். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT