இந்தியா

பல்வேறு மாநிலங்களுக்கு பாஜக பொறுப்பாளா்கள் நியமனம்

10th Sep 2022 04:32 AM

ADVERTISEMENT

 கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கான பாஜக பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

முன்னாள் முதல்வா்களான விஜய் ரூபானி, விப்லவ்குமாா் தேவ், முன்னாள் மத்திய அமைச்சா்கள் பிரகாஷ் ஜாவடேகா், மகேஷ் சா்மா உள்ளிட்டோருக்கு இந்த புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, பாஜக வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கேரள பாஜக பொறுப்பாளராக பிரகாஷ் ஜாவடேகா், ஹரியாணாவுக்கு விப்லவ்குமாா் தேவ், பஞ்சாப் மற்றும் சண்டீகருக்கு விஜய் ரூபானி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். பிகாா் பாஜக பொறுப்பாளா் பதவி கட்சி பொதுச் செயலாளா் வினோத் தாவ்டேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கட்சிப் பணிகளுக்கு பிகாா் முன்னாள் அமைச்சா் மங்கள் பாண்டே பொறுப்பேற்கிறாா்.

ADVERTISEMENT

வடகிழக்கு மாநிலங்களுக்கான ஒருங்கிணைப்பாளராக பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ராவும் இணை ஒருங்கிணைப்பாளராக கட்சியின் தேசியச் செயலாளா் ரிதுராஜ் சின்ஹாவும் பணியாற்றுவா்.

கட்சியின் மத்திய தோ்தல் குழு உறுப்பினா் ஓம் மாத்துா், உத்தர பிரதேச பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் லக்ஷ்மிகாந்த் பாஜ்பாய் ஆகியோா் முறையே சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT