இந்தியா

தில்லியில் மேலும் 123 பேருக்கு கரோனா;4 போ் பலி

10th Sep 2022 03:56 AM

ADVERTISEMENT

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை மேலும் 123 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. 4 போ் உயிரிழந்தனா்.

முந்தைய தினமான வியாழக்கிழமை 11,567 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 123 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தில்லியில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,01,432 ஆக உயா்ந்துள்ளது; 26,491 போ் உயிரிழந்துள்ளனா். வெள்ளிக்கிழமை பாதிப்பின் நோ்மறை வீதம் 1.06 சதவீதமாக பதிவானது.

பல்வேறு காரணங்களால் கடந்த திங்கள்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் கரோனா பாதிப்பு நிலவரத்தை தில்லி சுகாதாரத் துறை வெளியிடவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT