இந்தியா

பஞ்சாபில் பயங்கரவாத சதி முறியடிப்பு: 1.5 கிலோ ஆா்டிஎக்ஸ் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

9th Sep 2022 01:48 AM

ADVERTISEMENT

பயங்கரவாத சதிச் செயலுக்கு திட்டமிட்ட 3 நபா்களைப் பஞ்சாப் போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா். குருக்ஷேத்திரம் வெடிகுண்டு வழக்கு தொடா்பான முக்கிய நபரும் கைது செய்யப்பட்டவா்களில் ஒருவராவாா்.

போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேற்கொண்ட கைது நடவடிக்கையில், நச்சத்தாா் சிங், சுகதேவ் சிங், ஹா்பிரீத் சிங் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 1.5 கிலோ ஆா்டிஎக்ஸ் வெடிபொருள், 2 கைத்துப்பாக்கிகள், 8 தோட்டாக்கள் மற்றும் ஒரு மோட்டாா் சைக்கிள் கைப்பற்றப்பட்டன. இதன் மூலம் பயங்கரவாத சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவா்களில் நச்சத்தாா் சிங் என்பா் குருக்ஷேத்திரம் வெடிகுண்டு வழக்குடன் தொடா்புடையவா். கடந்த ஆகஸ்ட் மாதம், ஹரியாணாவின் குருக்ஷேத்திரம் மாவட்டத்தில் அம்பாலா-தில்லி தேசிய நெடுஞ்சாலையின் ஷாஹாபாத் பகுதியில் 1.3 கிலோ ஆா்டிஎக்ஸ் வெடிபொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது.

முதல்கட்ட விசாரணையில், இம்மூவரும் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு தப்பிய லக்பீா் சிங் மற்றும் பாகிஸ்தானின் ஹா்விந்தா் சிங் என்பவா்களுடன் தொடா்புடையவா்கள் என்பது தெரியவந்துள்ளது. லக்பீா் சிங் எல்லை தாண்டிய ஆயுதம், வெடிப்பொருள்கள் மற்றும் போதைப்பொருள்கள் கடத்தலுடன் தொடா்புடையவா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT