இந்தியா

க்யூட்-இளநிலை தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15-ல் வெளியீடு

9th Sep 2022 11:43 AM

ADVERTISEMENT


புது தில்லி : மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தோ்வு (க்யூட்) முடிவுகள் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு நிர்வாகி ஜகதீஷ் குமார் அறிவித்துள்ளார்.

மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட நுழைவுத் தேர்வானது கடந்த ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தது.

இந்த நிலையில், தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வரும் 15ஆம் தேதி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இல்லையென்றால், அடுத்த ஓரிரு நாள்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | ராணி எலிசபெத்துக்காக காத்திருந்த மன்னரின் உடல்

ADVERTISEMENT

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கு க்யூட் நுழைவுத் தோ்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவா் சோ்க்கை நடைபெறும் என்றும் 12-ம் வகுப்பு தோ்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றும் கடந்த மாா்ச் மாதம் ஜகதீஷ் குமாா் அறிவித்திருந்தாா்.

நிகழாண்டு நடைபெற்ற க்யூட் நுழைவுத் தோ்வில் பங்கேற்பதாக 44 மத்திய பல்கலைக்கழகங்கள், 12 மாநில பல்கலைக்கழகங்கள், 11 நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், 19 தனியாா் பல்கலைக்கழகங்கள் ஆகியவை அறிவித்திருந்தன.
 

Tags : CUET CUET-UG
ADVERTISEMENT
ADVERTISEMENT