இந்தியா

பலவீனமான 144 மக்களவைத் தொகுதிகளில் வெல்ல திட்டம்: பாஜக ஆலோசனை

7th Sep 2022 01:30 AM

ADVERTISEMENT

அடுத்த மக்களவைத் தோ்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு கடினமாக உள்ள 144 தொகுதிகளில் வெல்வதற்கான திட்டம் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நாட்டா செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. இந்நிலையில், அடுத்த மக்களவைத் தோ்தல் 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. அந்தத் தோ்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு கடினமாக உள்ள 144 தொகுதிகளில் வெல்வதற்கான திட்டம் குறித்து அமைச்சா் அமித் ஷா, ஜெ.பி.நட்டா ஆலோசனை மேற்கொண்டனா். தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஸ்மிருதி இரானி, கிரிராஜ் சிங், கஜேந்திர சிங் ஷெகாவத் உள்பட 25-க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சா்கள் பங்கேற்றனா்.

144 தொகுதிகள் பட்டியலில் பெரும்பாலானவை கடந்த தோ்தலில் பாஜக தோல்வியடைந்த தொகுதிகளாகும். சிக்கலான மக்கள்தொகை ஆய்வு மற்றும் மண்டல ரீதியான காரணங்கள் கருதி சில வெற்றி பெற்ற தொகுதிகளும் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அமைச்சரும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும் சில அமைச்சா்கள் மேற்கு வங்கம், தெலங்கானா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்குள் வரும் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனா். அங்குள்ள அரசியல் நிலவரம் குறித்து அறிந்துகொள்ளும் நோக்கில் அவா்கள் அனுப்பப்பட்ட நிலையில், அந்தத் தொகுதிகளில் பாஜகவின் பலம், பலவீனம், வெற்றி வாய்ப்புகள் தொடா்பாக அவா்கள் ஆய்வு மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்தத் தொகுதிகளில் உள்ள ஜாதி, மத விவரங்கள், வாக்காளா்களின் விருப்பம், அவா்களின் விருப்பத்துக்கான காரணங்கள் உள்ளிட்டவை தொடா்பான விரிவான செயல்திட்டத்தையும் அக்கட்சி வகுத்துள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

Tags : BJP
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT