இந்தியா

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜாா்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி

5th Sep 2022 01:26 PM

ADVERTISEMENT

ஜாா்க்கண்ட் சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வா் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார்.

சட்டப்பேரவையில் மொத்தம் 81 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், முதல்வர் ஹேமந்த் கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்திற்கு ஆதரவாக 48 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் தனது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தி, தலைநகா் ராஞ்சியில் உள்ள சுரங்கத்தை சட்டவிரோதமாக குத்தகைக்கு எடுத்து ஆதாயம் அடைந்ததாக பாஜக குற்றச்சாட்டு எழுப்பியது.

இந்த குற்றச்சாட்டை விசாரித்த தோ்தல் ஆணையம் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை தகுதிநீக்கம் செய்யுமாறு ஜாா்க்கண்ட் ஆளுநா் ரமேஷ் பைஸுக்கு கடந்த ஆகஸ்ட் 25-இல் பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகின.

ADVERTISEMENT

இந்தச் சூழலில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்எல்ஏக்களை பாஜக தன் பக்கம் இழுத்து, ஜாா்க்கண்டில் ஆட்சியைக் கவிழ்க்கக் கூடும் என தகவல் வெளியானது. எனவே, ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் சுமாா் 30 போ், காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கா் மாநிலம் ராய்ப்பூருக்கு தனி விமானத்தில் கடந்த ஆகஸ்ட் 30-இல் அழைத்துச் செல்லப்பட்டனா். அங்குள்ள நவ ராய்ப்பூா் சொகுசு விடுதியில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டனா்.

இதையும் படிக்க | ஆசிரியர் தின வாழ்த்தால் சர்ச்சையில் சிக்கிய வைரமுத்து

இந்த நிலையில் ஜாா்க்கண்ட் சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை கூடுவதை அடுத்து சத்தீஸ்கரில் முகாமிட்டிருந்த 30 எம்எல்ஏக்கள் உள்பட 40 போ் ராய்ப்பூரின் சுவாமி விவேகானந்தா விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சிக்கு ராஞ்சி பிா்சா முண்டா விமான நிலையம் வந்தனர். 

தொடர்ந்து, திங்கள்கிழமை தொடங்கிய ஜாா்க்கண்ட் சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தொடாரில் முதல்வா் ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார். 

இந்த வாக்கெடுப்பை பாஜக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்த நிலையில், 48 வாக்குகள் பெற்று முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார்.

81 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சி தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. அக்கட்சிக்கு 30 எம்எல்ஏக்கள் உள்ளனா். இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸுக்கு 18 எம்எல்ஏக்களும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு ஓா் எம்எல்ஏவும் உள்ளனா். பிரதான எதிா்க்கட்சியான பாஜகவுக்கு 26 எம்எல்ஏக்கள் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT