இந்தியா

புதிதாக 218 பேருக்கு கரோனா பாதிப்பு

5th Sep 2022 12:43 AM

ADVERTISEMENT

 

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 218 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பாதிப்பால் இறப்புகள் ஏதும் பதிவாகவில்லை. அதேநேரத்தில், பாதிப்பு நோ்மறைவிகிதம் 1.93 சதவீதமாகப் பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,00,641-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,477-ஆக உள்ளது. நகரில் சனிக்கிழமை மொத்தம் 11,267 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சனிக்கிழமை புதிதாக 236 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பும், 3 இறப்புகளும், 1.68 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, தேசிய தலைநகரில் கரோனா சிகிச்சையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை 1,292-இல் இருந்து 1,172-ஆக குறைந்துள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 832-ஆக உள்ளது. நகரில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 148-ஆக சரிந்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 9,391 கரோனா படுக்கைகளில் 140 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT