இந்தியா

குஜராத் பால விபத்து: பேசும்போது மேடையில் அழுத பிரதமர் மோடி!

31st Oct 2022 05:06 PM

ADVERTISEMENT


குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த மோர்பி தொங்கு பால விபத்து குறித்து பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடி மேடையிலேயே அழுத விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

குஜராத் மாநிலத்தின்    பனாஸ்கந்தா பகுதியில் பல்வேறு நலத் திட்டங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி திங்கள் கிழமை இன்று (அக்.31) அடிக்கல் நாட்டினார். 

அப்போது மேடையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் வளர்ச்சிக்கு மத்திய அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகளைப் பட்டியலிட்டுப் பேசினார். 

படிக்கதிட்டமிட்ட நேரத்துக்கு முன்பே திறக்கப்பட்ட தொங்கு பாலம்: 141 பேரை பலிவாங்கத்தானோ?

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து மோர்பி பாலம் விபத்துக்குள்ளானது குறித்து பேசத் தொடங்கினார். அப்போது, தளுதளுத்த குரலில் பேசிய மோடி, மேடையின் நின்றபடியே கண் கலங்கினார். பின்னர் பேசுவதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொண்டு தொடர்ந்து உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

குஜராத்தில் மோர்பியில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த நூறாண்டு பழைமைவாய்ந்த தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை அறுந்து விபத்துக்குள்ளானது. 

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், அதிக அளவிலான மக்கள் அப்பகுதியில் இருந்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

படிக்க தொங்கு பாலம் விபத்து: பாஜக எம்பியின் உறவினர்கள் 12 பேர் பலி

கடந்த 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தின்போது குஜராத் மாநிலம் மோா்பி நகரில் உள்ள மச்சு நதி மீது 230 மீட்டா் நீள தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. பொதுமக்களின் முக்கிய சுற்றுலா தலமாக இந்தப் பாலம் திகழ்ந்தது.

புனரமைப்பு காணமாக மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், அப்பணிகள் முடிந்து கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி குஜராத்தி புத்தாண்டன்று மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT