இந்தியா

10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த மத்திய அரசு திட்டம்: பிரதமர் மோடி

29th Oct 2022 08:09 PM

ADVERTISEMENT

10 லட்சம் வேலைவாய்ப்பினை உருவாக்கவே தனது அரசு உழைத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் அரசு ஏற்பாடு செய்த வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் காணொலி மூலம் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். இதன்மூலம், அரசுப் பணியில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க: வடிவேலு பாணியில் ஒரு மோசடி: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டிய 8 வீடுகளை காணவில்லை

காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: குஜராத் பஞ்சாயத்து சேவைக் கழகத்தின் மூலம் 5000 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 8000 பேருக்கு காவல் துறை சார்பில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த பணி நியமன ஆணைகளை குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் வழங்கினார். இந்த நல்ல நாளில் நாங்கள் 15 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைக்கான கடிதங்களை வழங்கியுள்ளோம். இனி வரும் நாட்களில் இதுபோன்ற வேலைவாய்ப்பு மேளாக்கள் அதிக அளவில் நடைபெற உள்ளது. மத்திய அரசு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக உழைத்து வருகிறது என்றார்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT