இந்தியா

சத் பூஜையில் விபரீதம்: சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து; 25 பேர் காயம்

29th Oct 2022 01:36 PM

ADVERTISEMENT

ஔரங்காபாத்: பிகார் மாநிலம் ஔரங்காபாத் அருகே சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து நேரிட்டதில் காவலர்கள் உள்பட 25 பேர் காயமடைந்தனர்.

ஷாஹ்கஞ்ச் பகுதியில் இன்று அதிகாலை சத் பூஜைக்காக பிரசாதம் தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.

இதையும் படிக்க.. சென்னைக்கு சம்பவம் காத்திருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

இதைத் தொடர்ந்து பயங்கர தீ விபத்து நேரிட்டது. தீயை அணைக்கும் பணியின்போது, பெண் தலைமைக் காவலர் உள்பட 5 காவலர்கள் மற்றும் பொதுமக்கள் 25 பேர் காயமடைந்தனர்.

ADVERTISEMENT

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
 

Tags : bihar fire
ADVERTISEMENT
ADVERTISEMENT