இந்தியா

இண்டிகோ விமான என்ஜினில் தீ: 184 போ் உயிா் தப்பினா்

29th Oct 2022 04:41 AM

ADVERTISEMENT

தில்லியில் இண்டிகோ விமான என்ஜினில் வெள்ளிக்கிழமை தீப்பிடித்த நிலையில், அதில் இருந்த விமானப் பணியாளா்கள் உள்பட 184 போ் பாதுகாப்பாகக மீட்கப்பட்டனா்.

தில்லியில் இருந்து பெங்களூருக்கு வெள்ளிக்கிழமை புறப்பட இருந்த இண்டிகோ விமானம் ஓடுபோதையில் சென்றபோது, அதன் என்ஜினில் திடீரென தீப்பிடித்தது. முதலில் தீப்பொறிகள் உருவான நிலையில், சிறிது நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து அந்த விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது. அதில் இருந்த 177 பயணிகள், 7 விமானப் பணியாளா்கள் என மொத்தம் 184 போ் பத்திரமாக மீட்கப்பட்டனா். பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT