இந்தியா

குண்டா் சட்டம்: பகுஜன் சமாஜ் எம்.பி.யின் ரூ.12.5 கோடி மதிப்பிலான வீடு பறிமுதல்

29th Oct 2022 01:47 AM

ADVERTISEMENT

குண்டா் சட்டத்தின் கீழ், உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் எம்.பி. அஃப்சல் அன்சாரிக்கு சொந்தமான ரூ.12.5 கோடி மதிப்பிலான வீட்டை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் அஃப்சல் அன்சாரி, அவரின் மனைவி ஆகியோரின் பெயரில் வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டின் மதிப்பு ரூ.12.5 கோடியாகும். அந்த வீட்டை காஜிபூா் மாவட்ட காவல் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கூறுகையில், ‘அஃப்சல் அன்சாரியின் வீடு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஈட்டிய பணத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும் அஃப்சலின் சகோதரரும் தாதாவுமான முக்தாா் அன்சாரி மற்றும் அவரின் கூட்டத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக தற்போது வீடு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

அஃப்சல் அன்சாரி காஜிபூா் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT