இந்தியா

தீபாவளி பரிசாக பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த பாஜக? காங்கிரஸ் குற்றச்சாட்டு

29th Oct 2022 04:55 PM

ADVERTISEMENT

தீபாவளி பரிசாக பத்திரிகையாளர்களுக்கு ரூ.1 லட்சம் லஞ்சமாக கொடுக்க கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை முயற்சித்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும், அவர் முதல்வர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய வேண்டும் எனவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ‘இதுவும் கடந்து போகும்’: உடல்நல பாதிப்பு குறித்து சமந்தா அதிர்ச்சித் தகவல்!

இது குறித்து தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தது இதன் மூலம் தெளிவாகிறது. இந்த முறை முதல்வர் நேரடியாக பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தது அம்பலமாகியுள்ளது. அவர் கர்நாடகத்தில் உள்ள ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் 1 லட்சம் ரூபாய் தீபாவளி பரிசு என்ற பெயரில் லஞ்சமாக கொடுக்க முயற்சி செய்துள்ளார். இதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பத்திரிகையாளர்களுக்கு தலை வணங்குகிறேன்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: சென்னைக்கு சம்பவம் காத்திருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக அரசு லஞ்சம் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது இது முதல்முறையல்ல.  பத்திரிகையாளர்களுக்கு இவ்வாறு லஞ்சமளிக்க முதல்வருக்கு எங்கிருந்து பணம் வருகிறது. மக்களின் பணத்தை லஞ்சமாக பாஜக அரசு வழங்க முயற்சிக்கிறது. முதல்வர் பசவராஜ் பொம்மை இந்த குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து பதவி விலக வேண்டும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT