போபாலில் உள்ள நீர் வடிகட்டுதல் ஆலையில் சிலிண்டரில் இருந்து குளோரின் வாயு கசிந்ததால் 7 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்கா மலையில் உள்ள போபால் மாநகராட்சியின் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் புதன்கிழமை 900 கிலோ எடையுள்ள குளோரின் சிலிண்டர் கசிந்ததாக ஷாஜனாபாத் பகுதியின் காவல் உதவி ஆணையர் உமேஷ் மிஸ்ரா தெரிவித்தார்.
இதனால், ஆலைக்கு அருகில் வசிப்பவர்கள் 7 பேர் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எரிவாயு கசிவு ஏற்பட்டதையடுத்து, சிலருக்கு மூச்சுத் திணறல், இருமல் மற்றும் வாந்தி போன்றவை ஏற்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
படிக்க: வாட்ஸ்ஆப் சேவை முடக்கம்: மத்திய அரசு நோட்டீஸ்
எரிவாயு கசிவு கவனிக்கப்பட்டதை அடுத்து, வடிகட்டுதல் ஆலையில் சிலிண்டர் தண்ணீரில் வீசப்பட்டது. மேலும் ஆலையில் ஏற்பட்ட பழுதை சரி செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
முன்னதாக, 1984 டிசம்பரில் ஏற்பட்ட செயல்படாத யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சு புகையை சுவாசித்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.