இந்தியா

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: திருப்பி விடப்பட்ட ரயில்களின் பட்டியல்

26th Oct 2022 04:55 PM

ADVERTISEMENT

ஜார்க்கண்ட் மாநிலம் குர்பா ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் 53 பெட்டிகளுடன் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் அந்த வழியாக செல்ல வேண்டிய, வரவேண்டிய ரயில்களின் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

பல ரயில்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. சில ரயில்கள் இடையூறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

13305 தன்பாத்-டேஹ்ரியில் சோன் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தன்பாத்திலிருந்து புறப்படும் என்றும், 13553  அசன்சோல்-வாரணாசி எக்ஸ்பிரஸ் அசன்சோலில் இருந்து புறப்படும் என்றும், 13546 கயா-அசன்சோல் எக்ஸ்பிரஸ் கயாவிலிருந்து புறப்படும் என்றும், 13545 அசன்சோலில் இருந்து புறப்படும் அசன்சோல்-கயா எக்ஸ்பிரஸ் பகுதியளவு நிறுத்தப்பட்டதாக கிழக்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. 

திருப்பி விடப்பட்ட ரயில்களின் பட்டியல்:

ADVERTISEMENT

12381 ஹவுரா-புது டெல்லி எக்ஸ்பிரஸ்

13151 கொல்கத்தா-ஜம்முதாவி எக்ஸ்பிரஸ்

12365 பாட்னா-ராஞ்சி எக்ஸ்பிரஸ்

12319 கொல்கத்தா - ஆக்ரா கான்ட் எக்ஸ்பிரஸ்

12260 பிகானர் - சீல்டா எக்ஸ்பிரஸ்

12988 அஜ்மீர்-சீல்டா எக்ஸ்பிரஸ்

12382 புது தில்லி-ஹவுரா எக்ஸ்பிரஸ்

13152 ஜம்மு தாவி-கொல்கத்தா எக்ஸ்பிரஸ்

12444 ஆனந்த் விஹார் டெர்மினஸ்-ஹல்டியா எக்ஸ்பிரஸ்

12802 புது தில்லி-பூரி எக்ஸ்பிரஸ்

இதையும் படிக்க: மின்கம்பம் விழுந்து பலியான சிறுமியின் தலை மாயம்: காவலர்கள் விசாரணை

தன்பாத் கோட்டத்திற்கு உள்பட்ட குர்பாவில் சரக்கு ரயில் தடம் புரண்டதைக் கருத்தில் கொண்டு பயணிகளின் வசதிக்காக ரயில்வே ஹெல்ப்லைன் எண்களையும் வெளியிட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT