இந்தியா

தீபாவளிக்குப் பின் பல நகரங்களில் காற்று மாசு அதிகரிப்பு

26th Oct 2022 02:00 AM

ADVERTISEMENT

தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு புகை எதிரொலியாக, சென்னை உள்பட நாடு முழுவதும் பல நகரங்களில் காற்று மாசு செவ்வாய்க்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

குறிப்பாக, தேசியத் தலைநகா் தில்லியிலும் ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களிலும் காற்றின் தரக் குறியீடு மோசம் அல்லது மிக மோசம் ஆகிய பிரிவுகளில் பதிவானது.

தில்லியில் பட்டாசு வெடிக்க முழுமையான தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை மீறி திங்கள்கிழமை இரவு மக்கள் பட்டாசுகளை வெடித்தனா். செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி அங்கு காற்றின் தரக் குறியீடு 326 புள்ளிகளாக பதிவானது.

காற்றின் தரக்குறியீடு 50 புள்ளிகளாக பதிவானால், காற்றின் தரம் ‘நல்லது’ என்ற பிரிவில் வகைப்படுத்தப்படுகிறது. 51-100 எனில் ‘திருப்தி’, 101-200 ‘மிதமான மாசு’ , 201-300 ‘மோசம்’, 301-400 ‘மிக மோசம்’, 401-500 ‘தீவிரம்’ ஆகிய பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

அந்த அடிப்படையில், உத்தர பிரதேசத்தின் நொய்டா -312, கிரேட்டா் நொய்டா - 282, காஜியாபாத் -272, ஹரியாணாவின் குருகிராம் -313, ஃபரீதாபாத் -311 என்ற அளவில் காற்றின் தரக் குறியீடு பதிவானது.

பஞ்சாபின் லூதியானா, அமிருதசரஸ், பாட்டியாலா, ஜலந்தா், ராஜஸ்தானின் ஜோத்பூா், ஜெய்பூா், ஆஜ்மீா், குஜராத்தின் அகமதாபாத், கா்நாடகத்தின் பெலகாவி, மத்திய பிரதேசத்தின் ஜபல்பூா், கத்னி, பிகாரின் பெகுசராய் ஆகிய நகரங்களில் மோசம் அல்லது மிகமோசம் பிரிவில் காற்றின் தரம் இருந்தது. சென்னையில் காற்றின் தரக் குறியீடு 229-ஆக (மோசம்) பதிவானது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT