நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி முறையை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தில்லியில் கல்வித்துறையில் அற்புதமான பணியைச் செய்துள்ளோம். அனைத்து அரசுப்பள்ளிகளும் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஐந்தாண்டுகளில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளை மேம்படுத்த முடியும் என்று இந்தியில் கூறியுள்ளார்.
எங்களுக்கு இந்தத் துறையில் அனுபவம் உள்ளது. எங்களை அனுபவத்தை முழுமையாகப் பயன்படுத்துங்கள். நாட்டுக்காகச் சேர்ந்து செயல்படுவோம்.
பிரதமர் மோடி பள்ளியறையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்ட கேஜரிவால் தனது சுட்டுரையில்,
படிக்க: தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை, ரூ.2,000 அபராதம்: எங்கே?
இன்று நாட்டின் அனைத்துக் கட்சிகளும் தலைவர்களும் கல்வி மற்றும் பள்ளிகளைப் பற்றிப் பேசுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இது எங்களின் மிகப்பெரிய சாதனை. தேர்தலின்போது மட்டுமல்லாது, அனைத்து அரசுகளும் இணைந்து ஐந்தே அண்டுகளில் பள்ளிகளை சிறந்த பள்ளிகளாக மாற்ற முடியும் என்றார்.
இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, காந்திநகரில் உள்ள பள்ளிக்குச் சென்று மாணவர்களுடன் உரையாடிய பிறகு கேஜரிவாலின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.