இந்தியா

அதிரடி தீபாவளி: விமானிகளுக்கு ஊதிய உயர்வை அறிவித்த ஸ்பைஸ்ஜெட்

19th Oct 2022 01:24 PM

ADVERTISEMENT


புது தில்லி: ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனமானது, தனது விமானிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு சுமார் 55 சதவீதம் அளவுக்கு ஊதிய உயர்வு அறிவித்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணியாற்றும் விமானிகளின் மாத ஊதியம் 55சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டு, சுமார் 80 மணி நேரம் விமானத்தை இயக்கும் விமானிகள் ரூ.7 லட்சம் வரை ஊதியமாக பெறும் வகையில் ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இதையும் படிக்க.. சதிகளுக்கு முக்கிய கருவியாகத் திகழ்ந்தார்: யாரைக் குறிப்பிடுகிறது விசாரணை ஆணையம்

அதாவது, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தனது கேப்டன்களுக்கான ஊதியம் 80 மணி நேரம் விமானத்தை இயக்குவதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த புதிய ஊதிய உயர்வானது வரும் நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல, பயிற்சியாளர்கள், முதல் தர மூத்த அதிகாரிகளின் ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT