இந்தியா

சிறுமி பாலியல் வன்கொடுமை: கர்நாடக மடாதிபதி மீது 2-வது போக்சோ வழக்கு

19th Oct 2022 10:07 AM

ADVERTISEMENT

 

கர்நாடக மாநில முருக மடத்தின் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது பாலியல் புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிச் சிறுமிகள் இருவா் அளித்த பாலியல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட கா்நாடக மாநில முருக மடத்தின் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நீதிமன்றக் காவலில் உள்ளார். 

இதனிடையே, ஜாமீன் கோரி கர்நாடக நீதிமன்றத்தில் மடாதிபதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணையில் உள்ளது. 

ADVERTISEMENT

இந்நிலையில், கர்நாடக மடாதிபதி  சிவமூா்த்தி முருகா சரணரு மீது மேலும் ஒரு மாணவி பாலியல் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர் மீது 2-வது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதனால், கைதான மடாதிபதிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags : POCSO
ADVERTISEMENT
ADVERTISEMENT