இந்தியா

குஜராத்தில் பாதுகாப்புத்துறை கண்காட்சியைத் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி! 

19th Oct 2022 12:12 PM

ADVERTISEMENT

 

குஜராத்தின் காந்திநகரில் பாதுகாப்புத்துறை கண்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். 

இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ள பிரதமர் மோடி சுமார் ரூ.15,670 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பாதுகாப்புத் துறைக்கு உத்வேகம் அளிக்கும் நோக்கத்துடன், இந்தியாவில் எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய பாதுகாப்பு கண்காட்சி குஜராத்தின் காந்திநகரில் இன்று நடைபெறுகிறது. 

காந்திநகரில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை கண்காட்சியின் (DefExpo-2022) தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் மற்றும் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் கலந்துகொண்டனர். 

ADVERTISEMENT

இந்த கண்காட்சியில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்த ஹெச்டிடி-40 ரக உள்நாட்டு பயிற்சி விமானத்தை அவர் திறந்துவைத்தார். இந்த விமானம் நவீன அமைப்புகளைக் கொண்டுள்ளது. விமானிகளுக்கு ஏற்ற அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை மற்றும் ஸ்டார்ட்அப்கள் மூலம் விண்வெளியில் பாதுகாப்புப் படைகளுக்குப் புதுமையான தீர்வுகளை உருவாக்கும் நோக்கத்துடன் மிஷன் டெஃப்ஸ்பேஸ்-ஐ அவர் தொடங்கி வைத்தார். குஜராத்தில் தீசா விமான நிலையத்துக்கும் பிரதமர் மோடி  அடிக்கல் நாட்டினார்.

படிக்க: தடையைமீறி போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கைது!

அடல்ஜியில் மிஷன் ஸ்கூல் ஆப் எக்ஸலென்ஸ் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஜூனாகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார்.

அதன்பின் ராஜ்கோட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார், அதன்பின் மாலையில், புத்தாக்க முறையில் கட்டுமானங்களைக் கட்டுவது குறித்த கண்காட்சியையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும், நாளை மிஷன் லைப் திட்டத்தைத் தொடங்கிவைக்கும் பிரதமர், ஹெட்ஸ் ஆர் மிஷன் மாநாட்டில் பங்கேற்கிறார். வயாரா நகரில் பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ள உள்ளார். 

இந்த நிகழ்வில் முதல்முறையாக பாதுகாப்புத் துறையில் முதலீட்டாளர்கள் மாநாடும் நடத்தப்பட உள்ளது. இதில் ஏறக்குறைய பல நிறுவனங்கள் தங்களின் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT