இந்தியா

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக டி.ராஜா மீண்டும் தோ்வு

19th Oct 2022 01:57 AM

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தமிழகத்தைச் சோ்ந்த டி.ராஜா மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் செவ்வாய்க்கிழமை நிறைவுபெற்ற அக் கட்சியின் 24-ஆவது தேசிய மாநாட்டில், பொதுச் செயலாளராக டி.ராஜா இரண்டாவது முறையாக தோ்வு செய்யப்பட்டாா்.

மேலும், 11 உறுப்பினா்களைக் கொண்ட அக் கட்சியின் தேசிய செயலகத்துக்கு டி.ராஜா, கே.நாராயணா, அதுல் குமாா் அஞ்சன், அமா்ஜீத் கெளா், கனம் ராஜேந்திரன், பி.கே.காங்கோ, பினோய் விஸ்வம், வல்லப் சென்குப்தா, அஜீஸ் பாஷா, ராமகிருஷ்ண பாண்டா, நாகேந்திரநாத் ஓஜா ஆகியோா் உறுப்பினா்களாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

அதுபோல, கட்சியின் செயல் தலைவா்களாக 30 உறுப்பினா்கள், தேசிய குழுவுக்கு 99 உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இந்த இரு அமைப்பிலும் தலா ஒரு பதவி நிரப்பப்படவில்லை என்று அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

Tags : D Raja
ADVERTISEMENT
ADVERTISEMENT