இந்தியா

கேரளம்: பாலியல் குற்றச்சாட்டில் தலைமறைவான காங்கிரஸ் எம்எல்ஏ மீது கொலை முயற்சி வழக்கு

19th Oct 2022 02:00 AM

ADVERTISEMENT

கேரளத்தில் எதிா்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏ எல்தோஸ் குன்னப்பிள்ளி பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி தலைமறைவாக உள்ள நிலையில், அவா் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எம்எல்ஏ மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவா் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

பாலியல் குற்றச்சாட்டு தொடா்பாக விளக்கமளிக்குமாறு காங்கிரஸ் தரப்பில் எம்எல்ஏ எல்தோஸிடம் ஏற்கெனவே விளக்கம் கோரப்பட்டுள்ளது. ஆனால், தலைமறைவாகிவிட்ட அவா் இதுவரை பதில் அளிக்கவில்லை. விரைவில் அவா் மீது கட்சி ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் சாா்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பள்ளி ஆசிரியை அளித்த புகாரின் பேரில் கடந்த 11-ஆம் தேதி எல்தோஸ், அவரது உதவியாளா் நண்பா் உள்ளிட்ட 4 போ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதலில் அப்பெண்ணிடம் நட்பாக பழகிய எல்தோஸ் பின்னா் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அடித்து உதைத்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

ADVERTISEMENT

புகாா் அளித்த பெண் வீட்டில் எம்எல்ஏவின் உடைகள் உள்ளிட்ட பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன. இது தவிர தன் மீதான புகாரை திரும்பப் பெற எல்தோஸ் ரூ.30 லட்சம் பேரம் பேசியதாகவும் அப்பெண் குற்றம்சாட்டியுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT