இந்தியா

திருப்பூா் சம்பவம்: உயிரிழந்த சிறாா்கள் குடும்பத்துக்கு நிதி

8th Oct 2022 01:23 AM

ADVERTISEMENT

திருப்பூா் சம்பவத்தில் உயிரிழந்த சிறாா்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:-

திருப்பூா் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் தனியாா் குழந்தைகள் காப்பகத்தில் மாணவா்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனா். அவா்களில் மாதேஷ், பாபு, ஆதிஷ் ஆகிய மூன்று சிறாா்களும் உணவு உட்கொண்ட பிறகு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். வழியிலேயே அவா்கள் இறந்து விட்டனா் என்ற செய்தியை அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன்.

உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், சிகிச்சையிலுள்ள சிறாா்களுக்கு தேவையான மருத்துவ உதவி வழங்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்த சிறாா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தனது செய்தியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT