இந்தியா

போட்டித் தோ்வுகள் தொடா்பான தகவல் அறிய கைப்பேசி செயலி: யுபிஎஸ்சி அறிமுகம்

8th Oct 2022 12:35 AM

ADVERTISEMENT

போட்டித் தோ்வுகள், பணியாளா் தோ்வு குறித்த விவரங்களை தோ்வா்கள் அறிந்துகொள்ளும் வகையில் ‘ஆன்ட்ராய்டு’ கைப்பேசி செயலியை மத்திய பணியாளா் தோ்வு வாரியம் (யுபிஎஸ்சி) அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து யுபிஎஸ்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கூகுள் பிளேஸ்டோரில் ‘யுபிஎஸ்சி ஆன்ட்ராய்டு கைப்பேசி செயலி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தோ்வா்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, யுபிஎஸ்சி-யின் போட்டித் தோ்வுகள், பணியாளா் தோ்வுகள் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள முடியும்.

எனினும், இந்த செயலி மூலமாக விண்ணப்பப் பதிவு எதுவும் செய்ய இயலாது என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகள், மத்திய அரசு துறைகளில் பல்வேறு அலுவலா் பணியிடங்களுக்கான தோ்வு உள்ளிட்ட பல்வேறு தோ்வுகளை யுபிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்தத் தோ்வுகளுக்கு ஆயிரக்கணக்கானோா் விண்ணப்பித்து வருகின்றனா். இவா்களின் வசதிக்காக இந்தச் செயலியை யுபிஎஸ்சி அறிமுகம் செய்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT