இந்தியா

வந்தே பாரத் ரயில் மீது எருமை மாடுகள் மோதி விபத்து: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்!

7th Oct 2022 10:09 AM

ADVERTISEMENT

 

மும்பையிலிருந்து குஜராத் சென்ற வந்தே பாரத் ரயில் எருமை மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயில் இன்ஜினின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். 

மும்பை சென்ட்ரல் - குஜராத் காந்தி நகர் வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 30 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 

இதையும் படிக்க | 139 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

ADVERTISEMENT

இந்நிலையில், மும்பையிலிருந்து குஜராத்தின் காந்திநகர் நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில், வத்வா நிலையத்திற்கு மணிநகர் செல்லும் ரயில் பாதையில் சென்று கொண்டிருந்தபோது வியாழக்கிழமை காலை 11.15 மணியளவில் 3-4 எருமை மாடுகளின் திடீரென ரயில் பாதையில் குறுக்கே வந்ததால் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ரயில் இன்ஜின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில் இன்ஜின் முக்கிய பகுதிகள் எதுவும் சேதமடையவில்லை. எருமை மாடுகளின் சடலங்களை அகற்றிய  8 நிமிடங்களுக்கு பின்னர் ரயில் புறப்பட்டு சரியான நேரத்தில் காந்திநகரை சரியான நேரத்தில் சென்றடைந்தது. இதில் விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயங்கள் ஏதுவுமின்றி உயிர் தப்பினர். 

சேதமடைந்த வந்தே பாரத் எக்ஸ்பிரலஸ் ரயில் மும்பை சென்ட்ரலில் உள்ள பழுதுபார்க்கும் மையத்தில் பழுதுபார்க்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT