இந்தியா

நேற்று எருமை, இன்று பசு: மீண்டும் விபத்துக்குள்ளான வந்தே பாரத் ரயில்

7th Oct 2022 09:19 PM

ADVERTISEMENT

குஜராத்தில் உள்ள ஆனந்த் ரயில் நிலையம் அருகே பசு மாடு மீது மோதியதில் வந்தே பாரத் ரயில் மீண்டும் சேதமடைந்துள்ளது. 

காந்திநகர்-மும்பை வழித்தடத்தில் வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், குஜராத்தில் உள்ள ஆனந்த் ரயில் நிலையம் அருகே பசு மாடு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் முன் பகுதியில் சிறிய அளவில் சேதமடைந்தது. 

இதையும் படிக்க- வந்தே பாரத் ரயிலுக்கு பெரிய அளவில் சேதம் இல்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 

இதன் காரணமாக 10 நிமிடங்கள் நின்ற ரயில் மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கியது. முன்னதாக நேற்று எருமை மாடுகள் மீது வந்தே பாரத் ரயில் மோதியதில் அதன் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில் இன்று மீண்டும் விபத்துக்குள்ளாகி உள்ளது. 

ADVERTISEMENT

இதனிடையே நேற்றைய விபத்து தொடர்பாக கால்நடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் தலைநகா் காந்தி நகரையும் மகாராஷ்டிரத் தலைநகா் மும்பையையும் இணைக்கும் வகையில் நாட்டின் 3-ஆவது ‘வந்தே பாரத்’ ரயில் சேவையைப் பிரதமா் மோடி கடந்த வெள்ளிக்கிழமை (செப்.30) தொடக்கிவைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT