இந்தியா

வந்தே பாரத் ரயிலுக்கு பெரிய அளவில் சேதம் இல்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 

7th Oct 2022 06:20 PM

ADVERTISEMENT

மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளான வந்தே பாரத் விரைவு ரயிலுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

குஜராத் தலைநகா் காந்தி நகரையும் மகாராஷ்டிரத் தலைநகா் மும்பையையும் இணைக்கும் வகையில் நாட்டின் 3-ஆவது ‘வந்தே பாரத்’ ரயில் சேவையைப் பிரதமா் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை (செப்.30) தொடக்கிவைத்தாா். இந்த ரயில் நேற்று காலை 11.15 மணியளவில் பத்வா மற்றும் மணிநகர் ரயில் நிலையத்திற்கு இடையே வந்தபோது விபத்துக்குள்ளானது.  

ரயில் செல்லும் பாதையில் குறுக்கே வந்த எருமை மாடுகள் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டதாகவும் இதனால் ரயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்ததாகவும் அதேநேரத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் ரயில் அங்கிருந்து வழக்கம்போல் புறப்பட்டு சென்றது.

இதையும் படிக்க- தனியார் டாக்ஸி செயலிகளுக்கு முற்றுப்புள்ளி: பெங்களூருவில் ஓட்டுநர்களின் புதிய முயற்சி

ADVERTISEMENT

இதையடுத்து சேதமடைந்த ரயிலின் முன்பகுதி மும்பை சென்ட்ரல் டிப்போவில் இன்று சரிசெய்யப்பட்டது. இந்த நிலையில் விபத்துக்குள்ளான வந்தே பாரத் விரைவு ரயிலுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா். அதேசமயம் சேதமடைந்த ரயிலின் முன்பகுதி சரிசெய்யப்பட்டது என்றும் அவர் கூறினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT