இந்தியா

வடகிழக்கு பகுதிக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் அமித் ஷா! 

7th Oct 2022 11:49 AM

ADVERTISEMENT

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வடகிழக்கு பகுதிக்கு இன்று மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

அமித் ஷாவுடன், பாஜக தலைவர் ஜெ.பி நட்டாவும் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வெள்ளிக்கிழமை மாலை அசாம் வர உள்ளார். 

இதுதொடர்பாக ஷா தனது சுட்டுரை பக்கத்தில், 

ADVERTISEMENT

சிக்கிம் மற்றும் அசாமுக்கு 3 நாள் பயணமாக வடகிழக்கு பகுதிக்குச் செல்கிறேன். கிழக்கு மற்றும் வடகிழக்கு மண்டல பால் கூட்டுறவு மாநாடு-2022 தொடக்கம். அதைத் தொடர்ந்து அசாமில் தொடர் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று பதிவிட்டார். 

படிக்க: சிவகங்கையில் இளைஞர் வீட்டில் என்ஐஏ சோதனையால் பரபரப்பு!

காங்டாக்கில் உள்ள ராஜ்பவனில் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை அமித்ஷா திறந்து வைக்கிறார். அதன்பிறகு பால் கூட்டுறவு மாநாட்டை அவர் தொடங்கி வைக்கிறார். 

அசாம் செல்வதற்கு முன், அமிது ஷாவும், நட்டாவும் இணைந்து குவஹாத்தியில் உள்ள விருந்தினர் மாளிகையில் அசாம் பாஜகவின் மையக் குழுவுடன் ஒரு சந்திப்பை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT