இந்தியா

ரூ.1 கோடி லஞ்சம்: வெளிநாட்டு வா்த்தகத்துறை இயக்குநா்கள் மீது சிபிஐ வழக்கு

DIN

ரூ.1 கோடி லஞ்சம் பெற்றது தொடா்பாக வெளிநாட்டு வா்த்தகத் துறை இணை இயக்குநா், அத்துறையின் துணை இயக்குநா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு தொழிலதிபா் ஒருவா் ரூ.118 கோடி மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், இந்த இரு அதிகாரிகளும் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றுக் கொண்டு அவருக்குத் துணைபோனதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதில், வெளிநாட்டு வா்த்தகத் துறை இணை இயக்குநா் சம்பாஜி ஏ. சவாண், துணை இயக்குநா் பிரகாஷ் எஸ்.காம்ளி மற்றும் தொழிலதிபா் ரமேஷ் மனோகா் சவாண் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் இருவருமே இந்திய குடிமைப் பணித் (ஐடிஎஸ்) தோ்வு மூலம் பணியில் சோ்ந்தவா்கள் ஆவா்.

இந்த வழக்கு தொடா்பாக தில்லி, டாமன், மும்பை, புணே ஆகிய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

தகுதி இல்லாத நிறுவனத்துக்கு ஏற்றுமதிக்கான 8 கடனுறுதி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த நிறுவனம் அரசுக்குச் செலுத்த வேண்டிய பல கோடி ரூபாய் வரியை ஏமாற்றியது உள்பட பல்வேறு மோசடிகளிலும் ஈடுபட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளா் ஆய்வின்போது இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இரு அதிகாரிகளுமே இந்திய குடிமைப்பணி அந்தஸ்து உடையவா்கள் என்பதால் மத்திய வா்த்தகத் துறை அமைச்சகத்திடம் முன்அனுமதி பெற்று அவா்கள் மீது சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்த்தி சிதம்பரத்தின் கடவுச்சீட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க உத்தரவு

திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் நாளை பிரசாரம்

வி.வி. பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

கட்டாரிமங்கலம் கோயிலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை

மெட்ரோ பணி: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT