இந்தியா

ஒற்றுமை யாத்திரை உண்மையான ராகுல் காந்தியை உருவாக்கியுள்ளது: ஜெய்ராம் ரமேஷ்

7th Oct 2022 08:02 PM

ADVERTISEMENT

காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள ஒற்றுமை நடைப்பயணத்தின் மூலம் உண்மையான ராகுல் காந்தி உருவாகி வருகிறார் என காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தின் மாண்டியாவில் நடைபெற்று வரும் இந்த ஒற்றுமை யாத்திரையின்போது அளித்த நேர்காணலில் இதனை அவர் தெரிவித்தார். மேலும், ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்த நடைப்பயணம் இதற்கு முன்னர் உள்ள நடைப்பயணங்கள் அனைத்தையும் காட்டிலும் மிக நீண்ட நடைப்பயணம் எனவும், காங்கிரஸ் தலைவர் தேர்தல் மிக முக்கியமான நிகழ்வு என்பதைக் காட்டிலும் இந்த ஒற்றுமை நடைப்பயணமே மிகவும் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க: மனிதர்களை மிஞ்சிய ரோபோக்கள்: 'ஃப்ரெஞ்ச் ஃப்ரை' செய்து அசத்தல்!

அந்த நேர்காணலின்போது ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது: “ இது காங்கிரஸுக்கான மாற்றம். இந்த ஒற்றுமை நடைப்பயணம் உண்மையான ராகுல் காந்தியை உருவாக்கி வருகிறது. நான் புதிய ராகுல் காந்தி என சொல்ல மாட்டேன். ஆனால், உண்மையான ராகுல் காந்தி என்றே கூற வேண்டும். காங்கிரஸ் தொண்டர்களுடனான அவரது ஆலோசனை, மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறியும் விதம் என பல்வேறு விஷயங்கள் அவரை உண்மையான ராகுல் காந்தியாக உருவாக்கி வருகிறது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: வாட்ஸ்ஆப்பில் வருகிறது புதிய வசதி

மனதளவில் ஏற்பட்டுள்ள மாற்றம் காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய சாதனை ஆகும். இந்த ஒற்றுமை நடைப்பயணம் காங்கிரஸ் கட்சியினால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது. நாங்கள் வீதிகளிலும், சாலைகளிலும் இறங்கி பாஜகவிற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறோம். நாங்கள் மக்களின் பிரச்னைகளை கையில் எடுத்துள்ளோம். எங்களது செயல்பாடுகளுக்கு பாஜக தற்போது பதிலளித்து வரும் கட்டாயம் உருவாகியுள்ளது. இதுவே இந்த ஒற்றுமை நடைப்பயணத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். இந்த நடைப்பயணம் தேர்தல் ரீதியாக இல்லாமல் மனதளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT