இந்தியா

எரிய மறுத்த ’ராவணன்’: நகராட்சி ஊழியர் பணியிடைநீக்கம்

7th Oct 2022 11:37 AM

ADVERTISEMENT

 

சத்தீஸ்கரில் தசரா கொண்டாட்டத்தின்போது ராவணனின் உருவ பொம்மை சரியாக எரியாததால் நகராட்சி ஊழியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் தாம்தரி மாவட்டத்தில் புதன்கிழமை தசரா விழா கொண்டாடப்பட்டது. இதிகாசத்தின்படி ராமர் ராவணனை வதம் செய்யும் நிகழ்வும் இரவில் நடைபெற்றது.

இந்நிலையில், அங்கு ராவணனின் உருவ பொம்மையை ஏற்பாடு செய்யும் பணியை நகராட்சி நிர்வாகம் கவனித்திருக்கிறது. ஆனால், ராவண வதத்தின்போது ராவணனின் பத்து தலைகள் சரியாக எரியவில்லை.  

ADVERTISEMENT

இதனால், இந்த நிகழ்வுக்கு பொறுப்பாளாராக நியமிக்கப்பட்ட நகராட்சி எழுத்தரான ராஜேந்திர யாதவ் என்பவரை மாவட்ட நகராட்சி நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்துள்ளது.

அவருடைய அலட்சியத்தால் நகராட்சி ஆணையத்திற்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாக பணியிடைநீக்கத்திற்கான காரணம் அளிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT