இந்தியா

139 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

7th Oct 2022 09:31 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 139 ஆவது நாள்களாக மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல்  ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. 

கடந்த மே 21 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 9 ஆகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.7.50 ஆகவும் குறைக்கப்படும் என அறிவித்தார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | குடும்ப அட்டைகளில் பெயா் மாற்றம்-நீக்கம்: நாளை குறைதீா் முகாம்

அதனைத் தொடர்ந்து சென்னையில் (மே. 22) பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.6.70 காசு குறைந்து ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், தொடர்ந்து 139 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருகின்றது. 

வெள்ளிக்கிழமை நிலவரப்படி (அக்.7) பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.94.24 ஆகவும் விற்பனையாகி வருகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT