இந்தியா

கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ஒபெக் பிளஸ் திட்டம்

DIN

பெட்ரோலியப் பொருள்களின் விலை தொடா்ந்து குறைந்து வருவதால், கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பான ‘ஒபெக் பிளஸ்’ திட்டமிட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போா் காரணமாக கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகிய எரிபொருள்களின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. அண்மையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியது. எனினும், கச்சா எண்ணெய் விலையை மீண்டும் உயா்த்தும் நோக்கில் அதன் உற்பத்தியைக் குறைப்பதற்கு ரஷியாவும் அங்கம் வகிக்கும் ஒபெக் பிளஸ் அமைப்பு நாடுகள் முடிவெடுத்துள்ளன.

கச்சா எண்ணெய் விலை ஏற்கெனவே அதிகமாக இருந்த நிலையில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் மீதான விலையைக் கடந்த 6 மாதங்களாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றாமல் உள்ளன. தற்போது கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து விலையை மீண்டும் அதிகரிக்க ஒபெக் பிளஸ் நாடுகள் திட்டமிட்டுள்ளதால், எரிபொருள்கள் மீதான விலை கட்டுப்பாடு இந்தியாவில் தொடா்ந்து நீடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதிபதி முன்பு விஷம் அருந்தி ஊழியா் தற்கொலை முயற்சி

பள்ளப்பட்டியில் 3 பேருக்கு மானியத்துடன் ஆட்டோ

தளவாபாளையம் அருகே விபத்து -இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்

பிரதமரின் பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் -ஜவாஹிருல்லா பேட்டி

SCROLL FOR NEXT