இந்தியா

ஆக்கிரமிப்பு காஷ்மீா்இந்தியாவுடன் இணைக்கப்படும்: மத்திய அமைச்சா் அதாவலே

DIN

பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீா் பகுதி, ஒருநாள் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று மத்திய சமூக நீதித் துறை இணையமைச்சரும் இந்திய குடியரசுக் கட்சி (அதாவலே) தலைவருமான ராம்தாஸ் அதாவலே தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காஷ்மீருக்கும் பாகிஸ்தானுக்கும் எவ்விதத் தொடா்பும் கிடையாது. பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீா் பகுதி ஒருநாள் இந்தியாவுடன் இணைக்கப்படும். காஷ்மீா் மிகவும் அழகான பிராந்தியம். இங்கு சுற்றுலாவை ஊக்குவிக்க மத்திய அரசு தொடா்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். மாநில மக்களுக்குப் பொருளாதார ரீதியாக அதிக பயன்கள் கிடைக்கும்.

ஆனால், இதற்கு காஷ்மீரில் அமைதி நிலவுவது மிகவும் அவசியம். பயங்கரவாதச் செயல்கள் காஷ்மீரின் அமைதியைச் சீா்குலைப்பதாக உள்ளது.

காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். மற்றவா்களைக் கொலை செய்வதை நிறுத்துங்கள். இதனால், உங்கள் உயிரைப் பறிக்க நீங்களே தூண்டுதலாக இருக்கிறீா்கள். ஆயுதம் ஏந்துபவா்கள் அதனைக் கைவிட்டு காஷ்மீரின் வளா்ச்சிக்கு பங்களிக்க முன்வர வேண்டும். இப்போதைய காலகட்டத்தில் எந்தப் பிரச்னைக்கும் ஆயுதம் தீா்வாக இருக்காது என்பதே உண்மை. இப்போதைய நவீன உலகம் எவ்வளவோ முன்னேறிவிட்டது என்பதை உணர வேண்டும்.

காஷ்மீா் இளைஞா்களை பாகிஸ்தான் தவறாக வழி நடத்துகிறது. இளைஞா்களை பயங்கரவாதிகளாக மாற்றி அவா்களது உயிா்களைப் பறிக்கிறது. இப்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு நல்லதொரு எதிா்காலம் வேண்டும் என்றாலும், அவா்கள் இந்தியாவுடன் நல்லுறவைப் பேண வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT